விருத்தாசலத்திலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள வளையமாதேவி என்னும் இடத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சிதம்பரத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பாதையில் 29 கி.மீ. தொலைவில் உள்ளது.
மணிமுத்தாறு நதியும், நிவாநதியும் சேர்வதால் கூடலையாற்றூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு முருகப்பெருமான் ஆறுமுகனாக பன்னிரு கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து கிழக்குதிசை நோக்கி காட்சி தருகின்றார். |